மேலும் செய்திகள்
என்னென்ன உணவு உண்பது ஆரோக்கியத்துக்கு நல்லது?
01-Sep-2024
வயதானவர்களை பாடாய்படுத்தும் முக்கிய பிரச்னை, வாயு, அஜீரணம். அவர்களின் உணவு முறையே, இதற்கு முக்கிய காரணம். இதை தவிர்க்க, அவர்கள் எந்த மாதிரி உணவு, எப்படி எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை கூறுகிறார், ஆயுர்வேத அரசு உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் மணிமேகலை.ஆயுர்வேதத்தில், 8 பிரிவுகள் உள்ளன. அதில் ஒரு பிரிவு, வயதானோருக்கு அளிப்பட வேண்டிய சிகிச்சை முறையாகும். 60 வயதை எட்டும் போது, ஜீரண சக்தி குறைந்து விடும். மலம் கழிக்க முடியாமல் அவதி அடைவார்கள். இதனால் முதியவர்கள், எளிதில் ஜீரணம் ஆக கூடிய உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். காலை, மதியம் சிறுதானிய உணவு எடுத்துக் கொள்ளலாம். ரொட்டி, களி போன்ற உணவு நல்லது. இரவு ஒரு நேரம் கஞ்சி குடிப்பது மிகவும் நல்லது. 16 மடங்கு தண்ணீரில் குருணை அரிசி, சிறு திராட்சை, நன்னாரி, நெல்பொரி, திப்பிலி, சுக்கு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து, தண்ணீருடன் கஞ்சியை குடிக்க வேண்டும். இந்த கஞ்சி, ஜீரணத்திற்கு உதவும். முதியவர்களுக்கு வாதம் அதிகமாக ஏற்படுவதால், வயிற்று தீ குறைவாக இருக்கும். இதனால் தான் ஜீரணத்திற்கு கஷ்டப்படுகிறார்கள்.வாயு சம்மந்தமான பிரச்னையில் இருந்து தப்பிக்க, வாழைக்காய், முருங்கை காய் மற்றும் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும். ஆனால் கருணை கிழங்கை சாப்பிடலாம். நீர் காய்களான சுரைக்காய், வெள்ளரிக்காய், கீரை வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். மைதா, பேக்கரி உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு, அவர் கூறினார்.
முதியவர்கள் சிறுநீரக பிரச்னையாலும் அவதி அடைகின்றனர். அவர்களுக்கு ஏற்படும் விதைப்பை வீக்கத்தால், மெல்ல சிறுநீர் போவது, துளி துளியாக போவது என, சிரமம் அடைகின்றனர். அதற்கு நெருஞ்சி முள் பானம் சிறந்த மருந்து. ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு கைப்பிடி நெருஞ்சி முள் கலந்து, ஒரு டம்ளர் வீதம் ஒரு நாளைக்கு, 5 டம்ளர் குடிக்க வேண்டும். இதன் வாயிலாக, விதைப்பை வீக்கம் குணமாகும். முதியவர்களுக்கு எலும்பு மூட்டு, மஜ்ஜை வறட்சி, நரம்பு பிரச்னைக்கு வாரம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் எண்ணெய் குளியல் மேற்கொள்ள வேண்டும். ஆயுர்வேதத்தில் முதியவர்களுக்கு, நெய் சம்மந்தமான மருந்துகள், லேகியங்கள் உள்ளன. அதன் வாயிலாக முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்னையை தீர்க்கலாம்.
01-Sep-2024