அரங்காயணம் பார்க்கலாம் வாங்க
கோவை; பொன்னியின் செல்வன் மற்றும் நண்பர்கள் வழங்கும் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலைப்பற்றிய முழுமையான ஆவணப்படம் ஆங்கில சொற்குறிப்புகளுடன் 'அரங்காயணம்' என்ற பெயரில் ராமர் கோவில் மண்டபத்தில் நாளை ஒளிபரப்பப்படுகிறது. ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் அமைந்துள்ள ஸ்ரீமத் அபிநவ வித்யா தீர்த்த பிரவசன மண்டபத்தில் நாளை (28ம் தேதி) மாலை 5:30 மணி முதல் 8:30 மணி வரை 'அரங்காயணம்' என்ற ஆவணப்படம் ஒளிபரப்பப்படுகிறது.இதில் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலின் வரலாற்று நிகழ்வுகளை முழுமையாக பார்க்கலாம். இதை பாம்பே கண்ணன் தயாரித்துள்ளார். இதில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்க ராம்நகர் கோவில் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.