உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தபால் கோட்டம் வாயிலாக கடிதம் எழுதும் போட்டி

தபால் கோட்டம் வாயிலாக கடிதம் எழுதும் போட்டி

பொள்ளாச்சி; தேசிய அளவில், தபால்துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு, 'டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட்டது.பொள்ளாச்சி தபால் கோட்டம் வாயிலாக, ஜோதிநகர் சாந்தி பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி செண்பகம் மெட்ரிக் பள்ளி மற்றும் உடுமலை சாந்தி பள்ளியில் போட்டி நடந்தது. ஜோதிநகர் சாந்தி பள்ளி சீனியர் முதல்வர் பாலராஜகோபால் துவக்கி வைத்தார்.போட்டியில், மொத்தம், 600 மாணவ, மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ஆங்கிலம், தமிழ், இந்தி மொழிகளில் உள்நாட்டு கடிதத்தில், 'ஏ4' அளவு தாளில், 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், ஆயிரம் வார்த்தைகளுக்குள்ளும் கடிதம் எழுதி, தங்கள் திறமையை வெளிக்காட்டினர்.தபால்துறை அலுவலர்கள் கூறியதாவது:மாணவர்கள் எழுதிய கடிதங்கள் சேகரிக்கப்பட்டு, தலைமை தபால்துறை பொது மேலாளருக்கு அனுப்பி வைக்கப்படும். தேசிய அளவில் முதல் பரிசு பெறுவோருக்கு, 50 ஆயிரம், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு பெறுவோருக்கு முறையே 25 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.மாநில அளவில் முதல் பரிசு பெறுவோருக்கு, 25 ஆயிரம், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு பெறுவோருக்கு முறையே, 10 ஆயிரம் மற்றும், 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை