உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 2 மணி நேரத்தில் 75 ஆயிரம் விதைப்பந்துகள்; லிம்கா சாதனை முயற்சியாக உருவாக்கம்

2 மணி நேரத்தில் 75 ஆயிரம் விதைப்பந்துகள்; லிம்கா சாதனை முயற்சியாக உருவாக்கம்

பொள்ளாச்சி, ; 'லிம்கா' சாதனை முயற்சியாக, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் 260 பேர், 2 மணி நேரத்தில், 75 ஆயிரம் விதைப்பந்துகளை உருவாக்கினர்.தமிழ்நாடு விமானப் படை-2 என்.சி.சி., சார்பில், சமூக சேவை மற்றும் சமுதாய மேம்பாட்டு செயல்பாட்டின் ஒரு பகுதியாக, காடு உருவாக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. அதனை மையமாகக் கொண்டு, 'லிம்கா' சாதனை முயற்சியாக, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் 260 பேர், 2 மணி நேரத்தில், 75 ஆயிரம் விதைப்பந்துகளை உருவாக்கும் நிகழ்வு நடந்தது.தேசிய மாணவர் படை கோவை குரூப் கமாண்டர் கர்னல் ராமநாதன் மேற்பார்வையில் நடந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு விமானப்படை என்.சி.சி., கமாண்டிங் அதிகாரி விங் கமாண்டர் பர்குணன் தலைமை வகித்தார். தொடர்ந்து, மாணவர்கள் விதை பந்துகளை உருவாக்கினர்.ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திரகுமார்மீனா, ஏ.எஸ்.பி., சிருஷ்டிசிங், நெகமம் நீர்வளத்துறை பாசனப்பிரிவு- உதவி பொறியாளர் ராஜன், பொள்ளாச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் சித்ரா, நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் தேன்மொழி ஆகியோர் நிகழ்வை பார்வையிட்டனர்.கல்லுாரி முதல்வர் கோவிந்தசாமி, என்.சி.சி., அலுவலர் லாவண்யா, தமிழ்நாடு விமானப்படை -2 என்.சி.சி., அதிகாரிகள் சதீஷ், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை