உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கரையானை கட்டுப்படுத்த உதவும் சுண்ணாம்பு கரைசல்

கரையானை கட்டுப்படுத்த உதவும் சுண்ணாம்பு கரைசல்

சூலுார்; ''தென்னை மரத்தின் அடிப்பகுதியில் சுண்ணாம்பு கரைசலை பூசுவதன் மூலம் கரையான் தாக்குதலை தடுக்கலாம்,'' என,விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.சுல்தான்பேட்டை வட்டாரம் மலைப்பாளையம் கிராமத்தில், வேளாண் அதிகாரிகள் மற்றும் வேளாண் பல்கலை மாணவிகள், தென்னை மரங்களை தாக்கும் கரையான்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.மாணவிகள் கூறியதாவது:குருத்து வண்டு, கருவண்டு என்று அழைக்கப்படும் கரையான்கள், ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்னையை அதிகளவில் தாக்கும்.முதிர்ந்த கரையான்கள், சிறிய மஞ்சள் - வெள்ளை நிறத்திலான பூச்சிகள் குழுவாக இருக்கும். அதில் பல வகையான பூச்சிகள் இருக்கும்.தோப்பில் கரையான் கூடுகள் கண்டால் அழித்துவிட வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் சுண்ணாம்பு கரைசலை பூசுவதன் மூலம் கரையான்கள் தாக்குதலை தடுக்கலாம். அங்கக உரங்கள் மக்காமல் இருந்தால் அவற்றை அகற்றி, சரியான வடிகால் வசதி அமைத்தல் வேண்டும். அத்துடன் நாற்றுகளின் காய்களை மணல் கொண்டு மூடி பாதுகாக்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை