உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எரிசாராயம் பறிமுதல்; மேலும் மூவர் கைது

எரிசாராயம் பறிமுதல்; மேலும் மூவர் கைது

--- நமது நிருபர் -கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், தமிழக எல்லையில் பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் போலீசார், கடந்த, 27ம் தேதி கம்பாலத்தறை அணை அருகே உள்ள வீட்டில் நடத்திய சோதனையில், 1,260 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, வீட்டு உரிமையாளர் கண்ணையன், 56, என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், தென்னந்தோப்பு உரிமையாளரான கண்ணையன், கள்ளில் கலப்பதற்காக எரிசாராயத்தை பதுக்கி வைத்திருப்பது தெரியந்தது. அவருக்கு தமிழகத்திலிருந்து எரிசாராயத்தை கடத்தி வந்து வழங்கியது காயம்குளம் கார்த்திகபள்ளி பகுதியைச் சேர்ந்த மனோஜ், 43, நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்த விகாஸ், 29, கன்னியாகுமாரி செறுவள்ளூர் பகுதியைச் சேர்ந்த வாசவ் சந்திரன், 30, ஆகியோர் என்பதும் தெரிந்தது. பாலக்காடு மாவட்டம், குழல்மன்னம் பகுதியில் பதுங்கி இருந்த அவர்கள் மூவரையும், நேற்று முன்தினம் இரவு சித்தூர் டி.எஸ்.பி., அப்துல்முனீர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதில், மனோஜ் மீது கலால் துறை அதிகாரியை தாக்கியது, எரிசாராயம் கடத்தல் உட்பட நான்கு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூவரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், மேலும் இருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி