மேலும் செய்திகள்
ரூ.2.5 கோடி மதிப்புள்ள ஓவியம் திருட்டு
12-Sep-2024
திருமூர்த்திமலையில் சுற்றுலா தினம் கொண்டாட்டம்
28-Sep-2024
போலீசை திசையை மாற்றுகிறது அரசு!
02-Sep-2024
கோவை : கோவை அரசு கலைக் கல்லுாரியின் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறை, தமிழக அரசின், கோவை சுற்றுலாத்துறை, சார்பில், உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.கல்லுாரியில், ஓவியம் வரைதல், முக ஓவியம் வரைதல், புதிய வணிக யோசனைகள் போட்டிகள் நேரடியாகவும், ப்ளையர் வடிவமைப்பு, புகைப்படம் எடுத்தல் போட்டிகள் இணைய வழியாகவும் நடத்தப்பட்டன. உலக சுற்றுலா தினத்தை நிறைவு செய்யும் நிகழ்வாக, கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறை தலைவர் சங்கீதா வரவேற்றார்.மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறையின் உதவி பேராசிரியர் தாமரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
12-Sep-2024
28-Sep-2024
02-Sep-2024