ஏழு போட்டிகளில் பரிசுகள் குவித்த எல்.கே.ஜி., குழந்தை
கோவை; எல்.கே.ஜி., பயிலும் குழந்தை பள்ளியில் நடந்த போட்டிகளில் ஏழு பரிசுகள் வென்று பெற்றோருக்கு பெருமை சேர்த்து 'சபாஷ்' பெற்றுள்ளார்.கோவை, காந்திபார்க், சலீவன் வீதியை சேர்ந்த ராகவேந்திரா-ஸ்பந்தனா தம்பதியரின் குழந்தை ஹவிஸ்யா. இவர் ஜி.டி., பள்ளியில் எல்.கே.ஜி., பயின்றுவருகிறார். இந்நிலையில், பள்ளியில் விளையாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.மாணவி ஹவிஸ்யா, திருக்குறள்(10 குறள்கள்) ஒப்புவித்தல் போட்டியில் முதலிடம், மேற்கத்திய நடனம், 'பேன்சி' உடை அணிதல், ஓட்டப்பந்தயம், பாடல் ஆகிய போட்டிகளில் இரண்டாம் இடமும், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் வரைதலில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளார். சிறு வயதில் கலை, விளையாட்டு என ஏழு போட்டிகளில் வெற்றி பெற்று பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளார் மாணவி ஹவிஸ்யா.பெற்றோரிடம் கேட்டபோது,'எங்களது குழந்தைக்கு நாங்களே வீட்டில் கற்றுத்தருகிறோம். 'நடன வகுப்புக்கு மட்டும் வெளியே செல்கிறார். வீட்டில் ஆர்வமுடன் எதையும் கேட்டறிந்து பயின்று வருகிறார்' என்றனர்.