பூட்டி கிடக்கும் ஏ.டி.எம்.,; வாடிக்கையாளர்கள் அவதி
வால்பாறை; வால்பாறையில், பூட்டி கிடக்கும் வங்கி ஏ.டி.எம்., மையத்தால், வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.வால்பாறை நகரின் மத்தியில், யூனியன் வங்கி சார்பில் ஏ.டி.எம்., அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக இந்த மையம் பூட்டியே கிடக்கிறது. இதனால் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் பணம் எடுக்க முடியாமல் அதிருப்தியில் உள்ளனர்.வங்கி வாடிக்கையாளர்கள் கூறுகையில், 'தோட்ட தொழிலாளர்களுக்கு, வால்பாறை நகரில் உள்ள வங்கிகள் வாயிலாக, தொழிலாளர்களின் வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படுகிறது.வால்பாறை நகரில் உள்ள ஸ்டேட் வங்கியில் மூன்று ஏ.டி.எம்., மிஷின் இருந்தும், ஒரு மிஷின் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. யூனியன் வங்கி ஏ.டி.எம்., கடந்த ஒரு வாரமாக பூட்டியே கிடக்கிறது. இதனால், எஸ்டேட் பகுதியிலிருந்து பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களும், வெளியூரிலிருந்து வால்பாறைக்கு வந்த சுற்றுலா பயணியரும் பணம் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்,' என்றனர்.யூனியன் வங்கி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வங்கியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த மிஷின் பழுதாகிவிட்டது. இதனால், புதிய மிஷின் கொண்டுவரப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் மிஷின் பொருத்தப்பட்டு, வாடிக்கையாளர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என்றனர்.