உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லோக்சபா தேர்தல் களைகட்டுது... கட்சிக்கொடி தயாரிப்பு பறக்குது!

லோக்சபா தேர்தல் களைகட்டுது... கட்சிக்கொடி தயாரிப்பு பறக்குது!

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இனி பிரசாரம், பொதுகூட்டம், கட்சி பேரணிகள், தெருமுனை பிரசாரம் என தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கிவிடும். பிரசாரத்துக்கும் பொதுக்கூட்டத்துக்கும் கொடி முக்கியம். ஆகவே, கட்சி கொடிகள் தயாரிக்கும் பணியும் துவங்கி விட்டது. கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள, காந்திஜி கதர் ஸ்டோரில் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.கதர் ஸ்டோர் நிர்வாகிகள் கூறியதாவது:கட்சிகளின் கூட்டணிகள் முடிவான பின், அதற்கு தகுந்தாற்போல் கொடிகளை தயாரிக்க துவங்கி விடுவோம். கட்சி கொடிகள், 8 இன்ச் நீளம் 10 இன்ச் அகலத்தில் இருந்து, 15 அடி உயரம், 30 அடி நீளம் வரை தயாரிக்கப்படும். அதிகமாக, 20 இன்ச் நீளம், 30 இன்ச் அகலம் உள்ள கொடிகளே விற்பனை ஆகும்.ஒரு நாளில், 5000 கொடிகளை தயார் செய்து விடுவோம். 30 ரூபாயில் இருந்து 2000 ரூபாய் வரை, கொடிகள் விற்பனைக்கு உள்ளன. கொடிகள் காட்டன், ஸ்பெஷல் காட்டன், வெல்வெட் துணிகளால் உற்பத்தி செய்யப்படும். பிளாஸ்டிக் கொடிகள் கிடையாது.கட்சி மோதிரங்கள், கையில் கட்டும் பேண்டுகள், தொப்பிகள், குடைகளும் ஜரூராக தயாராகி வருகிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை