உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலுாரில் இன்று உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்

சூலுாரில் இன்று உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்

சூலுார்; சூலுார் தாலுகா கிராமங்களில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் இன்று நடக்கிறது. மக்களை தேடி சென்று, குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும், மூன்றாவது புதன்கிழமை நடக்கும் இந்த முகாம்,சூலுார் தாலுகா கிராமங்களில் இன்று காலை, 9:00 மணிக்கு, துவங்கி நாளை காலை, 9:00 மணி வரை நடக்கிறது. இதற்கென வருவாய் கிராம வாரியாக தணிக்கை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சூலுாரில் கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஆகியோர் கள ஆய்வு செய்கின்றனர். கணியூரில் கூடுதல் கலெக்டரும், இருகூரில் மாவட்ட வருவாய் அலுவலரும் பங்கேற்று கள ஆய்வு செய்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளனர். ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், அதிகாரிகளிடம், மக்கள் தங்கள் குறைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம்.தொடர்ந்து, மாலை, 4:30 மணிக்கு, கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடக்க உள்ளது. தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், தங்கள் அறிக்கையினை கலெக்டரிடம் அளிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ