உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கற்பக விருட்சக வாகனத்தில் பெருமாள் புறப்பாடு

கற்பக விருட்சக வாகனத்தில் பெருமாள் புறப்பாடு

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் பிரம்மோத்ஸவத்தை ஒட்டி கற்பக விருட்சக வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இக்கோவிலில் ஏழாம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா நடந்து வருகிறது. இதுவரை சேஷ வாகனம், சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், யாளி வாகனம், நாச்சியார் திருக்கோலம், சந்திர பிரபை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.நேற்றுக் காலை கற்பக விருட்சக வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று குதிரை வாகனம் புறப்பாடு, திருமஞ்சனம், கொடி இறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.நாளை தீர்த்தவாரி, திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !