உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லாரி திருட்டு: டிரைவர் கைது

லாரி திருட்டு: டிரைவர் கைது

போத்தனூர்; கோவை, க.க.சாவடியை சேர்ந்தவர் அப்பாஸ், 47; சொந்தமாக லாரி வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். கடந்த, 9ல் போத்தனூர் மெயின் ரோட்டிலுள்ள சங்கீத் இரும்பு தொழிற்சாலை அருகே லாரியை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க சென்றார். மறுநாள் காலை லாரியை காணவில்லை. போத்தனூர் புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். விசாரித்த போலீசார் லாரி பவானி அருகே நிற்பதை கண்டுபிடித்தனர். அங்கு சென்ற போலீசார் லாரியை மீட்டனர். மேலும் லாரியை திருடிச்சென்ற சென்னை, மாதவரத்தை சேர்ந்த டிரைவர் தவுலத்பாஷா, 39 என்பவரை கைது செய்தனர். விசாரணையில், தவுலத் பாஷா, அப்பாஸிடம் டிரைவராக இருந்துள்ளார். குடும்பத்தை பிரிந்து வாழும் தவுலத்பாஷா, மது குடிப்பதற்காக இதுபோல் வாகனங்களை திருடிச்சென்று, உதிரி பாகங்களை விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி