உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நேந்திரன் விலை குறைவு: விவசாயிகள் விரக்தி

நேந்திரன் விலை குறைவு: விவசாயிகள் விரக்தி

மேட்டுப்பாளையம்; நேந்திரன், கதளி வாழைக்காய் விலை குறைந்ததால், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் அன்னுார் சாலை நால் ரோட்டில், தனியார் வாழைத்தார் ஏல மண்டியில் நேற்று ஏலம் நடந்தது. ஏலத்தில், நேந்திரன் ஒரு கிலோ அதிகபட்சம், 20 ரூபாய்க்கும், கதளி அதிகபட்சம், 52 ரூபாய்க்கும் ஏலம் போனது. பூவன் ஒரு வாழைத்தார் அதிகபட்சம், 650 ரூபாய்க்கும், ரஸ்தாலி 700க்கும், தேன் வாழை 800க்கும், செவ்வாழை 850 ரூபாய்க்கும், மொந்தன் 450க்கும், பச்சை நாடன் 500, ரோபஸ்டா 250 ரூபாய்க்கும் ஏலம் போனது. இதுகுறித்து வாழைத்தார் ஏல மண்டி நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, சின்னராஜ் ஆகியோர் கூறுகையில், ''கடந்த வாரம் நேந்திரன் ஒரு கிலோ அதிகபட்சம், 37 ரூபாய்க்கும், கதளி ஒரு கிலோ, 70 ரூபாய்க்கும் விற்றது. இந்த வாரம் அதிகளவில் வரத்து இருந்ததால், ஒரு கிலோ நேந்திரன் 20 ரூபாய்க்கும், கதளி 52 ரூபாய்க்கும் ஏலம் போனது. நேந்திரன், கதளி ஆகிய இரண்டும் கிலோவுக்கு, 17 ரூபாய் வரை விலை குறைந்து உள்ளது. மேலும் வாழைத்தார்களின் விலையும், ஐம்பது ரூபாய் வரை விலை குறைந்து ஏலம் போனது. விலை குறைவால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ