சந்திர கிரகணம் நிகழ்வு கோவில் நடையடைப்பு
வால்பாறை: நாடு முழுவதும் சந்திரகிரகண நிகழ்வு இன்று நடக்கிறது. இதையொட்டி, பெரும்பாலான கோவில்களில் இந்நிகழ்வின் போது நடை அடைக்கப்படுகிறது. கோவை மாவட்டம் வால்பாறை நகரில், மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுப்பிரமணிய சுவாமி கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. இன்று (3ம்தேதி) மாலை, 3:20 முதல் மாலை, 6:47 வரை சந்திரகிரகணம் நிகழ்கிறது. இதனால், காலை, 6:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை மட்டுமே நடை திறக்கப்படும். பிற்பகல் 1:00 மணிக்கு மேல் கோவில் நடை அடைக்கப்படும். நாளை (4ம் தேதி) காலை, 6:00 மணி முதல் வழக்கம் போல் கோவில் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும். மேற்கண்ட தகவலை சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல்அலுவலர் ேஹமாசாலினி தெரிவித்துள்ளார்.