உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலையில் மெட்ராஸ் மாணவர் கூட்டமைப்பு நிறுவன தினம்

வேளாண் பல்கலையில் மெட்ராஸ் மாணவர் கூட்டமைப்பு நிறுவன தினம்

கோவை; மெட்ராஸ் வேளாண் மாணவர்கள் கூட்டமைப்பின் 114வது நிறுவன தினம் கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை வளாகத்தில் நடந்தது.கடந்த 1911ம் ஆண்டு மெட்ராஸ் வேளாண் மாணவர்கள் கூட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. வேளாண் மாணவர்களின் மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது. 1913 முதல், மெட்ராஸ் அக்ரிகல்சுரல் ஜர்னல் எனும் வேளாண் ஆய்வு குறித்த கட்டுரைகளையும் இடைவிடாமல் பிரசுரித்து வருகிறது.இந்த அமைப்பின் 114வது நிறுவன தினம், கடந்த 14ம் தேதி கொண்டாடப்பட்டது. பல்கலை துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன் தலைமை வகித்தார். கரும்பு இனப்பெருக்க நிறுவன இயக்குநர் கோவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.வேளாண்துறை ஆய்வில் தனித்தன்மையோடு செயல்பட்டு வரும் 18 பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பல்கலை டீன் (வேளாண்மை) வெங்கடேச பழனிசாமி, மெட்ராஸ் வேளாண்மை இதழின் தலைமை ஆசிரியர் செந்தில் நடேசன், செயலாளர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை