மேலும் செய்திகள்
விநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம்
21-Apr-2025
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி, கொண்டேகவுண்டன்பாளையம் மதுரைவீரன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.பொள்ளாச்சி, கொண்டேகவுண்டன்பாளையத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன், மதுரைவீரன் உடனமர் பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் மற்றும் முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம் விழா, 3ம் தேதி, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.தொடர்ந்து, புண்யாக வாசனம், மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பிரவேச பலி, தீர்த்தம் மற்றும் முளைப்பாலிகை ஆலயம் அழைத்து வரும் நிகழ்வு நடந்தது. மாலையில், அங்குரார்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடந்தது.நேற்று, 4ம் தேதி, காலையில், மூல மந்திர ஹோமம், நாடி சந்தனம், மகா பூர்ணாஹுதி, தீபாராதனை உபச்சாரம், மூலஸ்தான கோபுர கும்பாபிஷேகம் மற்றும் மூலஸ்தான மூர்த்திகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.* வால்பாறை காமராஜ்நகர் மகாளியம்மன், கருப்பசாமி, குபேரவிநாயகர் கோவிலின் மஹா கும்பாபிேஷக விழாவில், நேற்று காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, மூலமந்திர ேஹாமம், தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நாடி சந்தனம், யாத்ரா தானம், கடபுறப்பாடு நடைபெற்றது.காலை, 9:30 மணிக்கு யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித தீர்த்தத்துடன், அர்ச்சகர்கள் கண்ணன், விஜயகுமார், கோவில் பூசாரி சாமிநாதன் ஆகியோர் கோவிலை வலம் வந்த பின் காலை, 9:45 மணிக்கு விமான கலசத்திற்கு மஹா கும்பாபிேஷகம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு மாங்கல்ய தாரணம், கோபூஜை, தசதரிசனம், மஹா தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம், 12:00 மணிக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிேஷக விழாவில் நுாற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
21-Apr-2025