உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மேட்டுப்பாளையம்:காரமடை அருகே புதிதாக கட்டிய ஆதிமூல செல்வகணபதி, மகா மாரியம்மன், வாழைத் தோட்டத்து அய்யன் ஆகிய கோவில்களில், கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. காரமடை அடுத்த மருதூர் ஊராட்சியில், கணுவாய்பாளையத்தில் பழமையான மகா மாரியம்மன் கோவில் சிதிலமடைந்ததால், இடித்துவிட்டு புதிதாக கோவில் கட்டினர். அதோடு ஆதிமூல செல்வகணபதி, வாழை தோட்டத்து அய்யன் ஆகிய சன்னதிகள் புதிதாக கட்டப்பட்டன. கும்பாபிஷேக விழா, 20ம் தேதி கோபூஜையுடன் துவங்கியது. நான்கு கால யாக பூஜைகள், எண் வகை மருந்து சாத்துதல் நடந்தன. நேற்று காலை 8:30க்கு, யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள், கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. 9:00 மணிக்கு, கோபுர கலசங்களுக்கும், மூலவர் சுவாமிகளுக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குருந்தமலை குழந்தை வேலாயுத சாமி கோவில் குருக்கள் ஜெயபாலசுப்பிரமணியம், விவேக் சிவம் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். இன்று துவங்கி, 12 நாட்களுக்கு மண்டல பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை, கணுவாய்பாளையம் ஊர் பொதுமக்கள், விழா கமிட்டியினர் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி