உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜெகன்நாத் பிராபர்ட்டீஸின் மஹா ருத்ராபிஷேக பூஜை

ஜெகன்நாத் பிராபர்ட்டீஸின் மஹா ருத்ராபிஷேக பூஜை

கோவை; ஜெகன்நாத் பிராபர்ட்டீஸ் சார்பில், மஹா ருத்ராபிஷேக பூஜைகள் மற்றும் ஒரு லட்சம் ருத்ர ஜப பாராயணம் வரும், 27ம் தேதி நடக்கிறது. ஜெகன்நாத் பிராபர்ட்டீஸ், குரோசோ நிறுவனம் மற்றும் கியா ஸ்டுடியோ கிட்ச்சன் வார்ட்ரோப்ஸ் சார்பில், நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோட்டில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் காலை 11:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை இந்நிகழ்ச்சி நடக்கிறது. ஸ்வரண மாதத்தில், சிவனை பூஜித்தால் காசி முதல் ராமேஸ்வரம் வரையான, 12 ஜோதிர் லிங்கங்களை தரிசனம் செய்த நற்பலன்கள் கிடைக்கும். இந்த மஹா ருத்ராபிஷேகத்தில், பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடக்கிறது. நாட்டின் அனைத்து நதிகளிலும் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், பசும்பால், தாமரை, தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் பன்னீர், திருமஞ்சனம், சந்தனம், பழரசம், வீபூதி, கரும்புசர்க்கரை, அரிசி மாவு, தேன், நெய், முதலிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடக்கிறது. பக்தர்களே அபிஷேகம் செய்யலாம். மாலை 6:30 மணிக்கு மஹா அலங்காரம், இரவு 7:00 மணிக்கு மஹா தீபாரதனைக்கு பின், மஹா பிரசாதம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை