உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில்களில் மஹா சுதர்சன ேஹாமம்

கோவில்களில் மஹா சுதர்சன ேஹாமம்

- நிருபர் குழு -பொள்ளாச்சி மற்றும் உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், மஹா சுதர்சன ேஹாமம் நேற்று நடந்தது.பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், சுதர்சன (சக்கரத்தாழ்வார்) ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு மஹா சுதர்சன ேஹாமம், காலை, 11:30 மணிக்கு பூர்ணாஹுதியும் நடைபெற்றது.காலை, 11:45 மணிக்கு மஹா அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.* பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், சுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு, காலை, 9:30 மணிக்கு சுதர்சன ேஹாமம், காலை, 10:30 மணிக்கு சக்கரத்தாழ்வார் மூலவர் மற்றும் உற்சவருக்கும் திவ்ய திருமஞ்சன அபிேஷகம் நடைபெற்றது.மதியம், 12:00 மணிக்கு தீபாராதனை, அன்னதானம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்றனர்.* உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், ஸ்ரீ சக்தரத்தாழ்வார் ஜெயந்தி விழா, கடந்த, 2ம் தேதி துவங்கியது. அன்று, விஸ்வக்சேன ஆராதனம், அங்குர ேஹாமம் நடைபெற்றது.கடந்த, 3ம் தேதி மகா கும்பஸ்தானம், சிறப்பு ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், நேற்று காலை, 7:00 மணிக்கு ேஹாமம், காலை, 10:00 மணிக்கு நவகலச விசேஷச திருமஞ்சனம் நடந்தது. பின்னர். விசேஷ மகா தீபாராதனை நடந்தது.ஜெயந்தியையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை, திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை