உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முன்னாள் மாணவர்கள் சார்பில் அரசு பள்ளியில் பராமரிப்பு பணி

முன்னாள் மாணவர்கள் சார்பில் அரசு பள்ளியில் பராமரிப்பு பணி

பொள்ளாச்சி: கோட்டூர் அரசுப்பள்ளியில், 75 ஆண்டு விழாவையொட்டி, 75 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த, 1955ம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது, 75 ஆண்டுகள் ஆனதையடுத்து, முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளியில் பவள விழா கொண்டாடப்படுகிறது. விழுதுகள் அமைப்பு, முன்னாள் மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில், 75 லட்சம் ரூபாய் மதிப்பிட்டீல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான பூமி பூஜை நடந்தது. பேரூராட்சி நிர்வாகத்தினர், ஊர் பெரியவர்கள் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்கள், பள்ளி கட்டடங்களை பார்வையிட்டதுடன், அவர்கள் படித்த வகுப்பறையில் அமர்ந்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ