உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீஸ்காரரை தாக்கியவர் கைது

போலீஸ்காரரை தாக்கியவர் கைது

போத்தனூர்; கோவை, செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிபவர் சிவபிரகாஷ். நேற்று முன்தினம் இரவு ஒத்தக்கால்மண்டபத்திலுள்ள டாஸ்மாக் பாரில் கல்லூரி மாணவர்கள் பிரச்னை செய்வதாக தகவல் வந்தது. சிவபிரகாஷ் அங்கு சென்று மாணவர்கள் கும்பலை வெளியே அழைத்து வந்தார். தொடர்ந்து அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். அப்போது மாணவர் கும்பலில் ஒருவர் கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து சிவபிரகாஷின் கன்னத்தில் தாக்கினார். இதில் அவருக்கு சிறு காயமேற்பட்டது. இத்தகவலறிந்த போலீசார் அங்கு சென்று மாணவர்களை கைது செய்தனர். விசாரணையில் தூத்துக்குடியை சேர்ந்த ஜோ என்பவர் போலீஸ்காரரை தாக்கியது தெரிந்தது. தொடர்ந்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை