உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கடையில் திருட முயன்ற நபர் கைது

கடையில் திருட முயன்ற நபர் கைது

சூலுார் : சூலுார் பி.கே.டி., நகரை சேர்ந்தவர் அப்பாஸ், 33. சூலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு, 10:00 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் கடைக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறி கிடந்தன. கல்லா பெட்டி உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, அவர் சூலுார் போலீசாரிடம் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் திருட முயன்ற நபரை அடையாளம் கண்டனர். பல்லடம் பச்சாபாளையத்தை சேர்ந்த ராமசாமி, 55 என்பவர், பூட்டை உடைத்து திருட முயன்றது தெரிந்தது. அந்நபரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி