விற்பனைக்காக எட்டு கிலோ கஞ்சா வைத்திருந்தவர் குண்டாசில் கைது
கோவை; விற்பனைக்காக எட்டே முக்கால் கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில், கைது செய்யப்பட்ட நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.பாலத்துறை சந்திப்பில் இருந்து, மதுக்கரை மார்க்கெட் செல்லும் ரோட்டில், காரில் வந்த நபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக, கோவை மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, கேரளாவை சேர்ந்த ஹைரன், 31, நபில், 30, ஜெயகுமார், 30, அப்துல் நாசர், 36, சாஜஹான், 30, சாதிக்பாஷா, 31 ஆகிய ஆறு பேரை, கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.இவர்களில் முக்கிய குற்றவாளியான, கேரள மாநிலம் ஆலப்புழா காயம்குளத்தை சேர்ந்த ஹைரன், 31 என்பவர், கலெக்டர் உத்தரவின்படி, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.