மேலும் செய்திகள்
சாலை விபத்தில் தந்தை, மகன் பலி
04-Mar-2025
மேட்டுப்பாளையம் : காரமடை அருகே மதுபோதையில் ஓடையில் விழுந்த நபர் பலியானார்.மேட்டுப்பாளையம் அருகே சிராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 43; சி.என்.சி., ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை காரமடையில் உள்ள மதுபான கடைக்கு வந்து, மது அருந்திவிட்டு கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் மயானம் அருகே நடந்த சென்று கொண்டிருக்கும்போது, அருகில் உள்ள ஓடையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும்வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து, காரமடை போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Mar-2025