பணிக்கு வராத மேலாளர் பணி நீக்கம்
பணிக்கு வராத மேலாளர் பணி நீக்கம்
கோவை காந்திபுரத்திலுள்ள தமிழ்நாடு ஓட்டலில், நேற்று காலை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், திடீர் ஆய்வு மேற்கொண்டார். உணவகம், அறைகள், மதுபானக்கூடத்தை ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட, தற்காலிக மேலாளர் முரளிதரன், முறையாக பணிக்கு வராதது தெரியவந்தது. அவரை பணியில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திரன் கூறுகையில், ''தமிழ்நாடு ஓட்டலில், ஒரு சில குறைகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தியுள்ளேன். தற்காலிக ஒப்பந்த அடிப்படை (அவுட்சோர்சிங்) முறையில், தேவையான பணியாளர்களை பணிக்கு அமர்த்தியிருக்கிறோம். நிரந்தர பணியாளர் நியமனம் குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்,'' என்றார்.