உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சீதா ராமர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

சீதா ராமர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

மேட்டுப்பாளையம்: காரமடை அருகே உள்ள சீதாராமர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. காரமடை அருகே மருதுார் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லப்பனுாரில் புதிதாக சீதா ராமர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் மாதம் நடந்தது. அதைத் தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடந்தது. மண்டல பூஜை நிறைவடைந்ததை அடுத்து, நிறைவு விழா நடந்தது. கோவில் நடை திறந்து மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம் ஆகிய வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்திற்கு பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தீர்த்த பிரசாதம் வழங்கிய பின், பஜனை நடந்தது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பக்தி சொற்பொழிவு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை