உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை

ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை

அன்னுார்; அன்னுார் ஐயப்பன் கோவில் மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்னுார், தென்னம்பாளையம் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா, கடந்த 14ம் தேதி நடைபெற்றது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.இதையடுத்து 24 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது. நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு ஐயப்பனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜை நடந்தது. அலங்கார பூஜையுடன் மண்டலாபிஷேகம் துவங்கியது. அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஐயப்ப சேவா சங்க தலைவர் வெங்கடாசலம், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பிரவீன் குமார் உள்பட திரளான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர். தினமும் மாலை 6:30 மணிக்கு மண்டல பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ