மேலும் செய்திகள்
மண்டல பூஜை திருவிழா; பாலக்கொம்பு ஊர்வலம்
16-Dec-2024
வால்பாறை; வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை திருவிழாவில் நேற்று சுவாமிக்கு ஆராட்டு விழா நடந்தது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலின், 38ம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா, கடந்த, 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை, 12:00 மணிக்கு நடுமலை ஆற்றில் ஆராட்டு விழா நடந்தது. தொடர்ந்து, 108 கலசங்களுடன் பக்தர்கள் புனித தீர்த்தத்தை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்று ஐயப்ப சுவாமிக்கு அபிேஷக பூஜை செய்தனர். மாலை, 6:30 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு, 1,008 விளக்கு பூஜை மற்றும் ஊஞ்சல் சேவை நடந்தது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இன்று, காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழாவும், மாலை 3:00 மணிக்கு புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து ஐயப்ப பக்தர்கள் ஊர்வலமாக பாலக்கொம்பு எடுத்து வருகின்றனர்.நாளை, 22ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி பூஜையும், மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை, அகிலபாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
16-Dec-2024