பல சமயங்களில் தோல்வியே அறிவை பெற வழிவகுக்கும் ! கல்லுாரி ஆண்டு விழாவில் பேச்சு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில், 27வது ஆண்டு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் கோவிந்தசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.பெங்களூரு இன்போசிஸ் சைபர் பாதுகாப்பு திட்ட தலைவர் கமலேஷ்சிங் தலைமை வகித்து பேசியதாவது:தொழில்துறைகளின் தேவை நாள்தோறும் மாறிக் கொண்டே வருகிறது. அந்த மாற்றங்களை புரிந்து கொண்டு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எந்தவொரு துறையினரும் சிறந்த நிலையை அடைய ஒழுக்கம், நோக்கம் மற்றும் தைரியம் தேவை. தோல்வி என்பது ஒரு போதும் தோற்கடிப்பு அல்ல. பல சமயங்களில் அது வெற்றியை விட அதிகமான அறிவை பெறுவதற்கு வழிவகுக்கும்.இவ்வாறு, பேசினார்.பெங்களூரு பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவன வினியோக மேலாளர் அசோக்ராஜமாணிக்காம் பேசுகையில், ''தனது வாழ்க்கையும் தொழில்முறையும் உருவாக கல்வியே முக்கியக் கருவியாக இருந்தது. கல்லுாரி கல்வி பயணத்தை முழுமையாக பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும்,'' என்றார்.மாணவர் சுந்தரேஸ்வராவுக்கு, அருட்செல்வர் விருது வழங்கப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் 9 இளங்கலை மாணவ, மாணவியருக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு, சிறந்த 'அவுட்கோயின் ஸ்டூடண்ட்' விருது வழங்கப்பட்டது.ஒரு மாணவிக்கு, ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசுடன் சிறந்த 'அவுட்கோயின் ஸ்டூடண்ட்' விருது வழங்கப்பட்டது. மேலும், 2021, 2022 மற்றும் 2023ம் ஆண்டுக்கான முதல், 2வது மற்றும் 3 வது ரேங்க் பிடித்தவர்களுக்கு, 'ரேங்க் ஹோல்டர்' விருது வழங்கப்பட்டன. தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு விருது வழங்கப்பட்டது.என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள் செயலாளர் ராமசாமி, இணைச் செயலாளர் சுப்ரமணியன், துணை முதல்வர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.