மேலும் செய்திகள்
தலைமை தெய்வமாக திகழும் பெரிய மாரியம்மன்
02-Apr-2025
தொண்டாமுத்துார் : போதையில்லா எதிர்காலத்தை உருவாக்க வலியுறுத்தி, 'போதையில்லா எதிர்காலத்தை நோக்கி' என்ற பெயரில், 5 கி.மீ., மற்றும் 10 கி.மீ., துார மராத்தான் போட்டி நடந்தது.தொண்டாமுத்துார் ரோட்டரி கிளப் சார்பில், தொண்டாமுத்துார் மாரியம்மன் கோவில் மைதானத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, ஓட்டத்தை துவக்கி வைத்தார். சிறுவர்களுக்கான, 5 கி.மீ., மராத்தான் போட்டி, தொண்டாமுத்துார், கெம்பனுார், தாளியூர், குளத்துப்பாளையம் வழியாக மீண்டும் தொண்டாமுத்துார் மாரியம்மன் கோவில் மைதானத்தில் நிறைவடைந்தது.10 கி.மீ., மராத்தான் ஓட்டம், தொண்டாமுத்துாரில் துவங்கி கெம்பனுார், தாளியூர், உலியம்பாளையம், தீனம்பாளையம், புதுப்பாளையம், குளத்துப்பாளையம் வழியாக மீண்டும் தொண்டாமுத்துாரில் நிறைவடைந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு, ரொக்கப் பரிசு, கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
02-Apr-2025