மேலும் செய்திகள்
வீரமாத்தி அம்மன் திருவிழா கோலாகலம்
27-Mar-2025
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையம் முத்து மாரியம்மன் கோவிலில், நேற்று திருவிழா நடந்தது.கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையம் முத்து மாரியம்மன் கோவிலில், கடந்த 15ம் தேதி திருவிழா நிகழ்ச்சி, நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.கடந்த 21ம் தேதி, கம்பம் வெட்டி கிணற்றில் விடுதல், கம்பத்திற்கு பூஜை செய்து கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்வு மற்றும் கம்பம் நடுதல், பூ வளர்த்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.22ம் தேதி, வேண்டுதல் பூவோடு எடுத்தல் மற்றும் அம்மன் அழைக்கும் நிகழ்வு நடந்தது.23ம் தேதி, அம்மன் அலங்காரம், மாவிளக்கு எடுத்து வருதல் மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து கம்பம் மற்றும் பூவோடு கிணற்றில் விடுதல் நிகழ்ச்சி நடந்தது. 24ம் தேதி, மஞ்சள் நீராடுதல் மற்றும் அம்மன் ஊர்வலம் நடந்தது.நேற்று, சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதில், கிணத்துக்கடவு சுற்று வட்டார மக்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பேரொளி வழிபாடு மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடந்தது.
27-Mar-2025