மேலும் செய்திகள்
இடையூறாக இருந்த மரங்கள் அகற்றம்
04-Jan-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் பகுதியில் உள்ள எருதுகட்டி மாரியம்மன் கோவிலில் நேற்று பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது.கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சியில் உள்ள விநாயகர், மாகாளியம்மன், எருதுகட்டி மாரியம்மன் கோவிலில், வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து, கும்பாபிஷேகத்தின் முதல் நிகழ்வாக நேற்று காலை பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. இதில், சுவாமிக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. இதில், சொலவம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
04-Jan-2025