உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாசாணியம்மன் கோவிலில் ரூ. 62.43 லட்சம் காணிக்கை

மாசாணியம்மன் கோவிலில் ரூ. 62.43 லட்சம் காணிக்கை

ஆனைமலை; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக, 62 லட்சத்து, 43 ஆயிரத்து, 789 ரூபாய் இருந்தது.ஆனைமலை மாசாணியம்மன் கோவில் வளாகத்தில், நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், சலவநாயக்கன்பட்டி பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.தட்டு காணிக்கை உண்டியலில், 22 லட்சத்து, 22 ஆயிரத்து, 770 ரூபாய்; நிரந்தர உண்டியலில், 40 லட்சத்து, 21 ஆயிரத்து, 19 ரூபாய் என மொத்தம், 62 லட்சத்து, 43 ஆயிரத்து, 789 ரூபாய் இருந்தது.மேலும், தங்கம் - 120 கிராம், வெள்ளி - 450 கிராம் இருந்தது.காணிக்கை எண்ணும் பணியில், அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி ஆணையர் நாகராஜ், மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள், திருமுருகன், மஞ்சுளாதேவி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை