உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வளர்ச்சி தொலைநோக்குடன் வருகிறது மாஸ்டர் பிளான்-2041

வளர்ச்சி தொலைநோக்குடன் வருகிறது மாஸ்டர் பிளான்-2041

கோவை மாநகராட்சியை உள்ளடக்கிய, கோவை உள்ளூர் திட்ட குழும பகுதியின் வளர்ச்சிக்கான ஒரு தொலை நோக்கு திட்டமே, 'மாஸ்டர் பிளான்-2041'.கடின உழைப்புக்குப்பின், நவீன தொழில்நுட்ப உதவியுடன் வல்லுனர்களால் உருவாக்கப்பட்ட இந்த திட்டம், அரசின் ஒப்புதலுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அடுத்த, 16 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் அமலில் இருக்கும். ஐந்து ஆண்டு காலத்திற்கு ஒரு முறை இந்த திட்டத்தை மறு பரிசீலனைக்கு உட்படுத்தி, தேவையான திருத்தங்களை மேற்கொள்ள, அரசு உத்தரவிட்டுள்ளது.அதிகரிக்கும் மக்கள் தொகை, அவர்களின் தேவைகள், போக்குவரத்து, சுகாதாரமான வாழ்க்கை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பொருளாதார மேம்பாடு போன்ற பல முக்கியமான அம்சங்களை ஆராய்ந்து, இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இருக்கும் நில பரப்பை குடியிருப்பு, வணிகம், தொழிற்சாலை, கல்வி, மருத்துவமனைகள் போன்றவைகளை நிறுவத்தகுந்த இடங்களை ஒதுக்கி, நில பயன்பாட்டு வரைபடம், அட்டவணை தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது.இந்த வரைபடம், அட்டவணை வாயிலாக, குடியிருப்பு பகுதிகளை கண்டறிந்து வீடு கட்ட நிலம் கண்டறியலாம். மனைப்பிரிவுகளை அமைக்கலாம். உள்ளாட்சிகளுக்கும் அடிப்படை வசதிகளை அளிக்க ஏதுவாக இருக்கும்.ஒரு மாநகராட்சி பகுதி நிலத்தின் பயன்பாடு அறிய அதன் வார்டு , பிளாக், டவுன் சர்வே(டி.எஸ்.,) எண் கண்டறிந்து நில பயன்பாடு அட்டவணை வாயிலாக, பயன்பாட்டை அறிந்து கொள்ளலாம். நம்முடைய சொத்து ஆவணங்களில் கிராமத்தின் பெயர், புல எண் என்றே இருக்கும்.அதற்குண்டான வார்டு, பிளாக், டி.எஸ்., எண் அறிய வரைபடத்தை பயன்படுத்தலாம். இதை எளிமைப்படுத்த கணினி வாயிலாக வசதி இருந்தால் சிறப்பாக இருக்கும்.டி.எஸ்.எல்.ஆர்., பட்டா, எப்.எம்.பி., போன்ற நில சம்பந்தமான கம்ப்யூட்டர் வழி சேவை பெற்றிடவும், விற்பனை ஆவண பத்திரப்பதிவுக்கும், இந்த டி.எஸ்., எண் அவசியம்.'முனிசிபல் வார்டு' வேறு; இந்த வார்டு வேறு. 'மாஸ்டர் பிளான்-2041' ஆவணங்களை, tcp.tn.gov.inஎனும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.--கனகசுந்தரம்முன்னாள் தலைவர் பதிவுபெற்ற பொறியாளர்கள் சங்கம் (கோவை)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ