உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாதா அமிர்தானந்தமயி தேவி பிறந்தநாள் மருத்துவ முகாம்

மாதா அமிர்தானந்தமயி தேவி பிறந்தநாள் மருத்துவ முகாம்

பெ.நா.பாளையம், ; மாதா அமிர்தானந்தமயி தேவி பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம் நடந்தது. கவுண்டம்பாளையம், நல்லாம்பாளையம் அமிர்த வித்யாலயா வளாகத்தில் அமிர்தா சேவா கேந்திரம் மற்றும் கற்பகம் மருத்துவமனை ஆகியன இணைந்து மருத்துவ முகாமை நடத்தியது. முகாமை டாக்டர் பாலாஜி, ராதாகிருஷ்ணன், செல்வகுமார், சுவாமினி முக்தாமிர்தா ப்ராணா, பிரம்மசாரிணி சர்வாமிர்தா உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இதில், கற்பகம் மருத்துவமனையைச் சேர்ந்த, 20 டாக்டர்கள் மற்றும், 20 செவிலியர்கள் பங்கேற்று ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி., ரத்த சர்க்கரை பரிசோதனை, பொது மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை பரிசோதனை, மகளிருக்கான அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டன. இதில், மணியகாரம்பாளையம் உருமாண்டம்பாளையம், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி