மேலும் செய்திகள்
நால் ரோட்டில் ரவுண்டானா அமைக்க எதிர்பார்ப்பு
18-Nov-2026
உடுமலை: மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தில், பிரதிபலிப்பான், மின்விளக்குகள் இல்லாததால், பாதசாரிகள், வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். கோவை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக, பல்வேறு நகரங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஆனால், பிரதிபலிப்பான், மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில், இரு சக்கர வாகன ஓட்டுனர்கள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இப்பாலத்தில், இவற்றை பொருத்த, நெடுஞ்சாலைத்துறையினரும், மடத்துக்குளம் பேரூராட்சியினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
18-Nov-2026