மெத்தை கம்பெனி தீ விபத்தில் எரிந்தது
அன்னுார் : அன்னுார் அருகே போடிதிம்மம்பாளையத்தில், மெத்தை கம்பெனி உள்ளது. 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில், 25க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இரண்டு குடோன்களில் மெத்தைகள், பஞ்சு மற்றும் இயந்திரங்கள் உள்ளன. நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு ஒரு குடோனில் தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு மற்றும் மெத்தைகள் எரிந்து கருகின. அன்னுார் தீயணைப்பு நிலைய சிறப்பு நிலை அலுவலர் கந்தசாமி தலைமையில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சேர்ந்து, நான்கு மணி நேரத்துக்கு மேல் போராடி, தீயை அணைத்தனர். 60 அடி உயரத்துக்கு தீ கொழுந்து விட்டு எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது.