உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அன்னபூர்ணா இனிப்பால் மகிழட்டும்

அன்னபூர்ணா இனிப்பால் மகிழட்டும்

ப ண்டிகை என்றாலே உணர்வுகளுக்கு, உறவுகளுக்கு தித்திப்பு. அறுசுவைகளில் இனிப்புக்கு கொஞ் சம் அதிகமான இடம் கொடுத்து விடுவோம். காலங்கள் மாறி, காட்சிகள் மாறிப்போன இக்காலகட்டத்தில், வீட்டில் தயாரித்தது எல்லாம், கடைகளில் கிடைக்க ஆரம்பித்து விட்டது. நமக்கும் வேலை மிச்சம் என கருதி, வீடுகளில், இனிப்பு, பலகாரங்கள் தயாரிப்பது குறைந்து, கடைகளில் வாங்கி, நாமும் சுவைத்து, உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கும் கொடுத்து வருவதாக மாறி விட்டது. இதற்கேற்ப, பொதுமக்களின் 'பல்ஸ்' தெரிந்து வைத்திருக்கிறது அன்னபூர்ணா. ஸ்வீட் ஸ்டால் மற்றும் ரெஸ்டாரண்ட் இணைந்து, கோவையில் 18 இடங்களில் வீற்றிருக்க, ஸ்வீட் ஸ்டால் மட்டும், பல இடங்களில் கிளைகளை பரப்பி விருந்து படைத்து வருகிறது. மினி பாதுஷா, சூர்யகலா, ப்ரூட் நட் பர்பி, மினி ட்ரை ரசகுல்லா, பிஸ்தா கட்லட் என, இனிப்பு சுவை பிரியர்கள் ஒரு கை பார்த்திருப்பர். தற்போது, தீபாவளிக்கு என, பர்பி சாக்லேட், பர்பி கேசர், மலாய் பர்பி, மில்க் கோதா பர்பி, பர்பி மில்க், அன்ஜீர் மில்க் கேக், கீர் கதம் ஸ்பெஷல், கிவி - பாதாம் காஜு டிலைட், சான்ட்விச் மில்க், ஸ்பேஷல் மில்க் கேக், திரிவேணி சக்ரா என, பல்வேறு சுவைகளில், வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. சற்றே மறந்து போன கடலை மிட்டாயை மீண்டும் சுவைக்க துாண்டும் வகையில், சிசேம் சிக்கி, பீனட் சிக்கி, கேஷ்யு சிக்கி, அசார்ட்டர் சிக்கி என்று பல்வேறு கலவைகளில் வழங்கி, அந்தநாள் ஞாபகத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். அன்னபூர்ணா இணையதளத்தில் குறிப்பிட்ட இனிப்புகள் வேண்டுமென பதிவிட்டு ஆர்டர் கொடுத்தால், வீட்டுக்கே அனுப்பப்படுகின்றன. உணவுப் பொருட்களை அ டைத்து விற்க, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பயோ கவர் பயன்படுத்தப்படுகிறது. தீபாவளி கொண்டாட்டத்தில், இனிப்பு நிறைந்த உணர்வுகளுக்கு, நாங்க கியாரண்டி என்று உறுதி அளிக்கின்றனர், அன்னபூர்ணா நிர்வாகத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை