உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழாயில் கசிவு ;மேயர் உத்தரவு

குழாயில் கசிவு ;மேயர் உத்தரவு

கோவை:மாநகராட்சி வடக்கு மண்டலம் வெள்ளக்கிணறு பிரிவு மற்றும் துடியலுார் முதல் இடிகரை செல்லும் ரோட்டில் வடவள்ளி, கவுண்டம்பாளையம், வீரகேரளம் கூட்டுக்குடிநீர் திட்ட இணைப்புகளில் கசிவு ஏற்பட்டுள்ளது. நேற்று ஆய்வு செய்த மேயர் கல்பனா, கசிவு பாதிப்புகளைஉடனடியாக சரி செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.51வது வார்டு சவுரி பாளையம், கருணாநிதி நகரில் ஆய்வு செய்த அவர், அப்பகுதியில் மழைநீர் வடிகாலை துார்வாரவும், சிறு பாலம் அமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரிக்கவும், 50வது வார்டு சவுரிபாளையம், உடையாம்பாளையம் பிரதான சாலையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து துவங்கவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி