உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எம்.பி.ஏ., துறை துவக்க விழா

எம்.பி.ஏ., துறை துவக்க விழா

கோவை, ; சங்கரா அறிவியல் மற்றும் வணிகக் கல்லுாரியின், 25வது எம்.பி.ஏ., துறை மாணவர்களுக்கான துவக்க விழா நடந்தது. சங்கரா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் ராமச்சந்திரன் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசினார். கோவை சால்சர் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் இணை நிர்வாக இயக்குனர் ராஜேஷ் துரைசாமி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர், எம்.பி.ஏ., துறையில் உள்ள கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள், சமகால உலகில் செயற்கை நுண்ணறிவுடன் எவ்வாறு வளர்ச்சியடைவது என விளக்கினார். சங்கரா அறிவியல் மற்றும் வணிகக் கல்லுாரியின் துணை இணைச் செயலாளர் நித்யா, முதல்வர் ராதிகா, துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை