உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய வலுதூக்கும் போட்டியில் கோவை இளைஞருக்கு பதக்கம் 

தேசிய வலுதூக்கும் போட்டியில் கோவை இளைஞருக்கு பதக்கம் 

கோவை: தேசிய அளவிலான வலுதூக்குதல் போட்டியில், கோவையை சேர்ந்த இளைஞர் மூன்று தங்கம் வென்றார். 'ரா பவர் லிப்டிங் இந்தியா' அமைப்பு சார்பில், தேசிய அளவிலான வலுதுாக்குதல் போட்டி, ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்தது. சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர், மூத்தோர் உள்ளிட்ட பிரிவுகளில் வலுதுாக்குதல், பெஞ்ச் பிரஸ் மற்றும் டெட்லிப்ட் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கோவை ஈச்சனாரி பகுதியை சேர்ந்த ஈஸ்வரன், மூத்தோர் பிரிவில் பங்கேற்றார். தனது பலத்தை காட்டிய ஈஸ்வரன், வலுதுாக்குதலில் 455 கிலோ எடை துாக்கி தங்கம் வென்றார். பெஞ்ச் பிரஸ் மற்றும் டெட் லிப்ட் போட்டிகளிலும், சிறப்பாக செயல்பட்டு இரண்டு தங்கம் என 3 தங்கம் வென்றார். மேலும், 'ஸ்ட்ராங் மேன்' பட்டத்தையும் வென்று அசத்தினார். ஈஸ்வரன் கூறுகையில், ''தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று, நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை