புற்றுநோய்க்கு மருத்துவ ஆலோசனை முகாம்
நெகமம்; நெகமம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய தரும சாலையில் சித்த மருத்துவ ஆலோசனை முகாம் இன்று நடக்கிறது.நெகமம், நாகர் மைதானம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய தரும சாலையில், மகாலிங்கம் மாரியம்மாள் மணி விழா அறக்கட்டளை மற்றும் கஸ்தூரிபா காந்தி நினைவு சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும், சித்த மருத்துவ ஆலோசனை முகாம், இன்று, 10ம் தேதி, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. இதில், புற்றுநோய், இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.