உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காங்., நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்

காங்., நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்

அன்னுார்: காங்., மாவட்ட தலைவர் தேர்ந்தெடுக்க கருத்து கேட்கும் கூட்டம் அன்னூரில் நடந்தது. காங்கிரசில் அமைப்பு மறு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. புதிய மாவட்ட தலைவரை தேர்வு செய்ய கருத்து கேட்கும், திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அன்னூரில் நடந்தது. காங்., அகில இந்திய செயலாளர் கோபிநாத் தலைமை வகித்தார். ஹரியானா மாநில காங்., முன்னாள் தலைவரும் திருப்பூர் வடக்கு மாவட்ட பார்வையாளருமான அசோக் தன்வர் பேசுகையில், ''கட்சியை மறு சீரமைக்கும் பணி நடக்கிறது. மாவட்ட தலைவரை தேர்ந்தெடுக்க நிர்வாகிகள், கூட்டத்தில் தொண்டர்கள் கருத்து தெரிவிக்கலாம். பின், தனியாகவும் தெரிவிக்கலாம்,'' என்றார். மாவட்ட தலைவர் பதவிக்கு, மாநில பொதுக்குழு உறுப்பினர் காளிசாமி உள்பட 20 பேர் விருப்ப மனு அளித்தனர். மேலும் பலர் விருப்ப மனு தாக்கல் செய்ய படிவம் பெற்று சென்றனர். மாநில செயலாளர்கள் சித்திக், செல்வகுமார், தொகுதி பொறுப்பாளர் பாப்பண்ணன், வட்டாரத் தலைவர் கதிர்வேல் உள்பட பலர் பங்கேற்றனர். பா.ஜ., பொருளாதார பிரிவு நிர்வாகிகள் நியமனம் சூலுார்: கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., பொருளாதார பிரிவுக்கு, மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மாரிமுத்து வழிகாட்டுதலின் படி, பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் சக்திவேல், புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். மாவட்ட இணை அமைப்பாளர்களாக ஸ்ரீபதி, பாலச்சந்திரன் ஆகியோரும், மாவட்ட செயலாளர்களாக, வெங்கடேஷ், சவுந்தர்ராஜன், ஆடிட்டர் பிரபாகரன், ராமசாமி, ஜனார்த்தனன், மோகன்ராஜ், சோமசுந்தரம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி