உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் நாளை எம்.ஜி.ஆர்., பாடல்கள் இசைக்கச்சேரி

கோவையில் நாளை எம்.ஜி.ஆர்., பாடல்கள் இசைக்கச்சேரி

கோவை : 'இதயக்கனி' மாத இதழ் மற்றும் கோவை லயன்ஸ் கிளப் ஆப் இன்டர்நேஷனல் இணைந்து, மலேசிய மெல்லிசை கலைஞர்களின் எம்.ஜி.ஆர்., பாடல்கள் இசைக்கச்சேரி, கோவையில் நாளை (அக்., 6) நடைபெறுகிறது.மலேசியாவின் டத்தோ கலைவாணர் தலைமையில், கெடா மாநில எம்.ஜி.ஆர்., நற்பணி மன்ற தலைவர் கலைமணி, ஹரி, தேவன், தேவா, மகேந்திரன், மேகநாதன், புருஷோத்தமன், தர்ஷினி ஆகியோர் பங்கேற்று எம்.ஜி.ஆர்., பாடல்களை பாடுகின்றனர். ஆடல், பாடல் நிகழ்ச்சியும் நடக்கிறது.கோவை - சிறுவாணி மெயின் ரோட்டில், பேரூர் அருகே பச்சாபாளையத்தில் உள்ள பி.எம்.என்.சுபா சுப்ரமணியன் விக்னேஷ் மகாலில், நாளை (அக்., 6) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், 3:00 முதல் இரவு, 9:00 மணி வரை இந்நிகழ்ச்சி நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர், 96009 87811 என்ற எண்ணுக்கு, கனக சுப்ரமணியத்தை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை