உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நுண்ணீர்ப்பாசன நுட்பம்; விவசாயிகளுக்கு பயிற்சி

நுண்ணீர்ப்பாசன நுட்பம்; விவசாயிகளுக்கு பயிற்சி

கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை, மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு நுண்ணீர்ப் பாசன நுட்பங்கள் குறித்த ஒருவார பயிற்சி நடந்தது.மத்திய அரசின், துல்லிய விவசாய மேம்பாட்டு மையத்தின், தோட்டக்கலைக்கான தேசியக் குழு நிதியுதவி வாயிலாக இப்பயிற்சி வழங்கப்பட்டது.விவசாயிகளுக்கு தங்குமிடம், உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன டீன் ரவிராஜ், பயிற்சியைத் துவக்கி வைத்து, வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான புதுமையான நீர்ப்பாசன முறைகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.தற்கால விவசாயத்தில் நுண்ணீர்ப் பாசனத்தின் தேவையை வலியுறுத்தும் இப்பயிற்சியில் தமிழ்நாடு முழுதும் இருந்து 30 விவசாயிகள் பங்கேற்றனர். சொட்டு நீர் பாசனம், அமைப்பு வடிவமைப்பு, நிறுவுதல், உரமிடுதல் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு நீர்மேலாண்மை, டிஜிட்டல் விவசாயம், நோய் மேலாண்மை, இயற்கை விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்தில் தானியங்கி பயன்பாடு உள்ளிட்டவை குறித்து பயிற்சியில் விளக்கப்பட்டது.துல்லிய விவசாயம் மற்றும் தோட்டக்கலைக்கான தேசியகுழுவின் இணை திட்ட இயக்குநர் ரோஹித்லால், நீர்ப்பாதுகாப்பில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து விவரித்தார்.பேராசிரியர் பாலாஜி கண்ணன், உதவிப் பேராசிரியர் அருணாதேவி மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ