உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களுக்கு ராணுவ அணிவகுப்பு பயிற்சி  

மாணவர்களுக்கு ராணுவ அணிவகுப்பு பயிற்சி  

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நாட்டுநலப்பணித்திட்ட முகாமில், ராணுவ அணிவகுப்பு பயிற்சி வழங்கப்பட்டது. மாணவர்களிடம் பொதுச்சேவையை வளர்க்கும் வகையில், நாட்டு நலப்பணித்திட்ட முகாம் அரசு சார்பில் நடத்தப்படுகிறது. அதன் படி தற்போது பள்ளிகளில் இம்முகாம் நடந்து வருகிறது. முகாமில், துாய்மை, விழிப்புணர்வு, போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில், பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நாட்டுநலப்பணித்திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. முன்னாள் ராணுவ வீரர் அருண்பாலாஜி, மாணவர்களுக்கு ராணுவ அணிவகுப்பு பயிற்சி அளித்தார். மேலும், சிலம்பம், கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை மாணவர்கள் ஆர்வத்துடன் மேற்கொண்டனர். தொடர்ந்து, என்.ஜி.எம். கல்லுாரி முன்னாள் முதல்வர் முத்துக்குமரன், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து டிராபிக் வார்டன் கமலக்கண்ணன் ஆகியோர் பேசினர். சப் - கலெக்டர் அலுவலக வளாகத்தில் துாய்மை பணிகளை மேற்கொண்டனர். இதில், நாட்டுநலப்பணித்திட்ட அதிகாரிகள், பள்ளி துாதர் பரமசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ