உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மில் தொழிலாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

மில் தொழிலாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை: கோவை மாவட்ட மில் தொழிலாளர்கள் சங்க 49வது மகாசபைக் கூட்டம், சங்கத் தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடந்தது.நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வில், தலைவராக ஜெகநாதன், பொதுச்செயலாளராக ஆறுமுகம், பொருளாளராக கிருஷ்ணன் மற்றும் செயலாளர்கள், துணைத்தலைவர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.'என்.டி.சி., ஆலைகளைத் திறந்து இயக்க வேண்டும், மூடப்பட்ட ஆலைத் தொழிலாளர்களுக்கு முழு சம்பள பணப்பயன்கள் வழங்க வேண்டும், தொழிலாளர் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், பஞ்சாலைகளில் கான்டிராக்ட் முறை அவுட்சோர்சிங் முறைகளைத் தடை செய்ய வேண்டும், தொழிலாளர் துறையில் உள்ள காலியிடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும், புலம்பெயர் தொழிலாளர்களை ஷிப்ட் முடிந்ததும் ஆலைகளுக்கு வெளியே சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மகாசபைக் கூட்டத்தில், 110 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி