உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கனிம வளம் கடத்தல் புகார்; நாளை ஆய்வு கூட்டம்

கனிம வளம் கடத்தல் புகார்; நாளை ஆய்வு கூட்டம்

அன்னுார்; அன்னுார் தாலுகாவில், கனிம வளம் எடுப்பது, கொண்டு செல்வது குறித்த புகார் மீதான ஆய்வுக் கூட்டம் நாளை நடக்கிறது. அன்னூர் தாலுகாவில், அக்கரை செங்கப்பள்ளி, குப்பனுார், பொகலுார், வடக்கலுார் உள்ளிட்ட சில ஊராட்சிகளில் தினமும் லோடு கணக்கில் சட்ட விரோதமாக, அனுமதியின்றி, மண் எடுத்து கடத்தப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து புகார் பெறப்பட்டது. இதையடுத்து, கோவை கலெக்டர் உத்தரவின் பேரில், அன்னுார் தாலுகா அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். 24 மணி நேரமும் கனிம வளம் கொண்டு செல்லும் லாரிகள் கண்காணிக்கப்பட்டன. இதையடுத்து கண்காணிப்பு குழுவால், புகார்கள், குறித்து ஆய்வு செய்து, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்க, ஆய்வுக்கூட்டம் வருகிற 12ம் தேதி மாலை 4:00 மணிக்கு அன்னுார் தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது.இதில் துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை