மேலும் செய்திகள்
எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
01-Aug-2025
கோவை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், செஞ்சுருள் சங்கம் சார்பில், சர்வதேச அளவிலான இளைஞர் தின விழாவின் ஒரு பகுதியாக, எச்.ஐ.வி. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு மினி மராத்தான், 5 கி.மீ. துாரத்துக்கு நேற்று நடந்தது. நேரு ஸ்டேடியம் அருகே துவங்கியமினி மராத்தானை,கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் கொடிய சைத்து துவக்கி வைத்தார். கல்லுாரி மாணவ, மாணவியர், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இம்மராத்தான் பாலசுந்தரம் ரோடு, ஆர்.டி.ஓ. அலுவலகம், அண்ணாதுரை சிலை வழியாக மீண்டும் நேரு ஸ்டேடியம் அடைந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி, கோவை மாவட்ட தடகள சங்க தொழில்நுட்ப தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
01-Aug-2025